உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஓய்வூதிய திட்ட காலக்கெடுவை நீட்டிக்க அரசு ஊழியர் கூட்டமைப்பு வலியறுத்தல்

ஓய்வூதிய திட்ட காலக்கெடுவை நீட்டிக்க அரசு ஊழியர் கூட்டமைப்பு வலியறுத்தல்

புதுச்சேரி : ஓய்வூதிய திட்டம் குறித்து முடிவு செய்ய ஆகஸ்ட் மாதம் வரை காலக்கெடு நீட்டிக்க வேண்டும் என, புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. கூட்டமைப்பின் கவுரவ தலைவர் சேஷாசலம் அறிக்கை:மத்திய அரசு புதிய ஒருங்கமைந்த ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் பணி நிறைவு பெற்றவர்கள் வரும் 30ம் தேதிக்குள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தை தொடர்கிறீர்களா அல்லது ஒருங்கமைந்த ஓய்வூதியத் திட்டத்தை தேர்வு செய்ய உள்ளீர்களா என்பதை முடிவு செய்ய மத்திய அரசு, ஊழியர்களுக்கும் அவகாசம் கொடுத்துள்ளது.மத்திய அரசால் அறிமுகப்படுத்திய ஒருங்கமைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த விவரங்களை புதுச்சேரி அரசு கடந்த 5ம் தேதி அதற்கான ஆணை மூலம் புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு அறிவித்தது.புதிய திட்டம் பற்றிய முழு விவரங்களும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சென்று சேரவில்லை. பல ஊழியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.புதுச்சேரி அரசு ஊழியர்கள் மற்றும் பணி நிறைவு பெற்றவர்கள், இத் திட்டம் தொடர்பாக நிதி ஆலோசனையை சம்பந்தப்பட்ட கணக்கு அதிகாரிகளை கலந்து ஆலோசித்து முடிவு எடுக்க கால அவகாசம் தேவைப்படுகிறது.எனவே, எந்த ஓய்வூதிய திட்டம் என்பதை முடிவு செய்ய கால அவகாசத்தை வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி