உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பள்ளி ஆண்டு விழா

அரசு பள்ளி ஆண்டு விழா

புதுச்சேரி: ஜீவானந்தபுரம், அரசு துவக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. பொறுப்பாசிரியர் கணேஷ் தலைமை தாங்கி, ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். ஆசிரியர் தமிழ்மலர் வரவேற்றார். லாஸ்பேட்டை தொகுதி வைத்தியநாதன் எம்.எல்.ஏ., அவரது மனைவி ரமா கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். பள்ளி துணை ஆய்வாளர் குலசேகரன், சப் இன்ஸ்பெக்டர் வசந்தி, சுப்புலட்சுமி, சிவக்குமார், குறிஞ்சி நகர் நலவாழ்வு சங்க உறுப்பினர் வைத்திலிங்கம் வாழ்த்துரை வழங்கினர்.ஆசிரியர் ராஜேஷ் தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை ஆசிரியை கன்னியம்மா மற்றும் பள்ளி அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.ஆசிரியை கோமதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ