மேலும் செய்திகள்
மர்ம நபர் கல் வீசியதில் வகுப்பறை கண்ணாடி சேதம்
25-Sep-2025
பாகூ : பாகூரில் அரசு பள்ளிக்கு பூட்டு போட்ட மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பாகூர் அரசு நடுநிலைப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல், பள்ளியின் கேட்டை வாட்ச்மேன் பூட்டி உள்ளார். நேற்று அதிகாலை பள்ளியின் கேட்டை திறக்க சென்றபோது, மற்றொரு பூட்டும், கேட்டில் பூட்டப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த வாட்ச்மேன் இது குறித்து தலைமை ஆசிரியருக்கும், பாகூர் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தலைமை ஆசிரியர் விசாரணை நடத்தினர். மர்ம நபர், கேட்டினை பூட்டியது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பூட்டு உடைக்கப்பட்டு பள்ளியின் கதவை திறக்கப்பட்டது. அங்குள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவு காட்சிகளை கொண்டு, பள்ளியை பூட்டிய நர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
25-Sep-2025