மழைநீர் தேங்கிய அரசு பள்ளி மைதானம்
காரைக்கால்: காரைக்கால், கோட்டுச்சேரியில், அரசு ஆரம்ப பள்ளி இயங்கி வருகிறது. இங்கு படிக்கும் மாணவர் களுக்கு தேவையான விளையாட்டு மைதானம் இருந்தும் மாணவர்கள் சரியான முறையில் விளையாடுவில்லை. மைதானத்தில் பூதர் மண்டி மழைநீர் தேங்கி யுள்ளது. இதனால் பள்ளி வளாகத்தில் விஷ பூச்சி களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.ஆசிரியர்கள், மாணவர்கள் அச்சமடைகின்றனர். மைதானத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால், தொற்று நோய் ஆபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை கல்வித்துறை அதிகாரி யாரும் கண்டுக்கொள்ளுவதில்லை.தொடர் மழையால் பல பள்ளிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியோற்ற நடவடிக்கை இல்லை. இதனால், பள்ளி வளாகங்கள் பூதர் மண்டி, விஷ பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்து, மாணவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. மழைநீரில் விளையாட்டு உபகரணங்களும் பராமரிப்பின்றி வீணாகி வருகின்றன. எனவே, மாவட்ட நிர்வாகம், மாணவர்கள் நலன் கருதி அனைத்து பள்ளிகளிலும் விளையாட்டு மைதானங்களை சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.