உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முன்னாள் முதல்வர் மரணம் கவர்னர், முதல்வர் இரங்கல்

முன்னாள் முதல்வர் மரணம் கவர்னர், முதல்வர் இரங்கல்

புதுச்சேரி: மறைந்த முன்னாள் முதல்வர் ராமச்சந்திரனுக்கு, கவர்னர், முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.கவர்னர் கைலாஷ்நாதன் இரங்கல் செய்தி;புதுச்சேரி முன்னாள் முதல்வர் ராமச்சந்திரன் இறந்த செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. புதுச்சேரி மக்களின் மீது அவர் கொண்டிருந்த அன்பும் மாநில வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பங்களிப்பும் பாராட்டத் தகுந்தவை. அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.முதல்வர் ரங்கசாமி இரங்கல் செய்தி;புதுச்சேரியின் முன்னாள் முதல்வரும், முதுபெரும் அரசியல் தலைவருமான ராமச்சந்திரன் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவர் புதுச்சேரி மாநிலத்திற்கு கொண்டு வந்த திட்டங்கள் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டவை. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.அவரது மறைவிற்கு புதுச்சேரி அரசு சார்பில் மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும். அவரது இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் செய்யப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை