கவர்னர், முதல்வர் கிறிஸ்துமஸ் வாழ்த்து
புதுச்சேரி : புதுச்சேரி கவர்னர், முதல் வர் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கவர்னர் கைலாஷ்நாதன் வாழ்த்து செய்தி
கிறிஸ்துவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். அன்பு, தியாகம், எளிமை, ஈகை போன்ற வாழ்வியல் நெறிகளை போதித்த ஏசு கிறிஸ்துவின் பிறந்த நாள் கொண்டாட்டம், உலக மக்கள் மத்தியில் சகோதரத்துவத்தையும், சமாதமானத்தையும் வளர்க்க வேண்டும். அனைவரிடத்திலும் அன்பை பரிமாறி கிறிஸ்துமஸ் விழாவை மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம். முதல்வர் ரங்கசாமி
கருணை, தியாகத்தின் மேன்மையை எடுத்துக்காட்டும் காலக்கண்ணாடியாக, ஏசுவின் பிறப்பு அமைந்துள்ளது. இறைமகன் ஏசு என்றும் நம்மோடு இருக்கிறார் என்பதையே, கிறிஸ்துமஸ் உணர்த்துகிறது.கிறித்துவ சகோத, சகோதரிகள் அனைவருக்கும் குழந்தை ஏசுவின் அன்பும், அருளும், ஆசீர்வாதமும் என்றும் கிடைப்பதாக அமையட்டும். எனது உளம் நிறைந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், திருமுருகன், சாய் சரவணன்குமார், எதிர்க்கட்சித் தலைவர் சிவா, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்.பி.,க்கள் வைத்திலிங்கம், செல்வகணபதி, மற்றும் அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன், அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் ஆகியோரும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.