உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கவர்னர், முதல்வர் கொடிநாள் வாழ்த்து

 கவர்னர், முதல்வர் கொடிநாள் வாழ்த்து

புதுச்சேரி: கொடிநாளையொட்டி, கவர்னர், முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கைலாஷ்நாதன் வாழ்த்துச் செய்தி; நாட்டின் எல்லைகளை, இரவு - பகலாக பாதுகாக்கும், இந்திய ராணுவம், கப்பற்படை, விமானப் படை வீரர்களுக்கு கொடி நாள் வாழ்த்துக்கள். அவர்களுடைய வீரத்தையும், தியாகத்தையும் நினைவு கூறும் முக்கிய நாளாகும். இந்நாளில், பாதுகாப்பு படையினர், முன்னாள் ராணுவத்தினரின் குடும்பங்கள் செய்த தன்னலமற்ற தியாகத்தை நாம் பாராட்ட வேண்டும். அவர்களுடைய நல்வாழ்வை மேம்படுத்த அனைவரும் பங்களிக்க வேண்டும். நம்முடைய ஒற்றுமையும், தேசப்பற்றையும் மேலும், வலுப்படுத்த, கொடிநாள் நிதியை தாராளமாக வழங்க வேண்டும். முதல்வர் ரங்கசாமி வாழ்த்துச் செய்தி;நாட்டின் பாதுகாப்பிற்காக எல்லைகளில் அயராது உழைத்து கொண்டிருக்கும், முப்படைகளின் வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், தங்களது உயிர் நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது. அவர்களது குடும்பத்தினரையும் போற்றி, மரியாதை செய்யும் வகையில், கொடிநாள் ஆண்டுதோறும் டிசம்பர் 7ம் தேதி, கடைபிடிக்கப்படுகிறது. ராணுவ வீரர்களின் மறு வாழ்வில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டியது நமது கடமையாகும். ஒவ்வொரு ஆண்டும் கொடி நாள் நிதியை, மக்கள் அதிக அளவில் கொடுத்து வருகிறார்கள். அதேபோல், இந்த ஆண்டும் அனைவரும் கொடிநாள் நிதியை வழங்கி நமது அன்பை வெளிப்படுத்த வேண்டும். என முதல்வர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி