உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கவர்னர், முதல்வர் குடியரசு தின வாழ்த்து

கவர்னர், முதல்வர் குடியரசு தின வாழ்த்து

புதுச்சேரி : கவர்னர் கைலாஷ்நாதன் வாழ்த்து செய்தி: பல்வேறு மொழி, சமயம், பண்பாட்டோடு சமத்துவத்தை போற்றுகின்ற நம்முடைய ஜனநாயகத்தின் கோட்பாடுகளை நாம் போற்றி காக்க வேண்டும். இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கி கொடுத்த நம்முடைய தேச தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். ஒளி மயமான எதிர்காலத்தை உருவாக்க இந்நன்னாளில் உறுதி ஏற்போம். முதல்வர் ரங்கசாமி: வலிமையான ஜனநாய அமைப்பை நாம் கொண்டிருப்பதன் காரணமாக இந்தியா, 'ஜனநாயகத்தின் தாய்' என்று அழைக்கப்படுகிறது. மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கான பல முன்னோடி திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த மக்கள் அரசுக்கு நல்லாதரவை நல்க வேண்டும். அதேபோல, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், முன்னாள் முதல்வர் நாராயணசாமி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை