உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருக்காமீஸ்வரர் கோவில் தேரோட்டம் கவர்னர், முதல்வர் துவக்கி வைப்பு

திருக்காமீஸ்வரர் கோவில் தேரோட்டம் கவர்னர், முதல்வர் துவக்கி வைப்பு

வில்லியனுார் : வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ தேர் திருவிழா நேற்று காலை கவர்னர், முதல்வர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ தேர் திருவிழா கடந்த மாதம் 22ம் தேதி பிடாரி அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து 30ம் தேதி விநாயகர் உற்சவம், 31ம் தேதி இரவு தேர் திருவிழா பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும் விழாவில் கடந்த 3ம் தேதி பாரிவேட்டை நிகழ்ச்சி, 5ம் தேதி 63 நாயன்மார்களுடன் பஞ்சமூர்த்திகள் வீதியுலா, 7 ம் தேதி இரவு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.முக்கிய நிகழ்வாக நேற்று தேர் திருவிழா நடந்தது. காலை 7:43 மணியளவில் சுவாதி நட்சத்திரத்தில் கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ ஜெயக்குமார், சாய்சரவணன்குமார், எதிர்க்கட்சி தலைவர் சிவா ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ., கோபிகா, சப் கலெக்டர் குமரன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சிவசங்கரன், உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். தேர் நான்கு மாட வீதிகள் வழியாக சென்று, பகல் 11:37 மணியளவில் நிலையை வந்தடைந்தது. இன்று (9ம் தேதி) காலை 10:00 மணியளவில் தேரடி உற்சவம், பகல் 12:00 மணியளவில் ஹிருதாப நாசினி தீர்த்தத்தில் சுவாமிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி, இரவு தெப்ப உற்சவம், அவரோகணம் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (10ம் தேதி) இரவு முத்துப்பல்லக்கு நிகழ்ச்சி, 11ம் தேதி விடையாற்றி உற்சவம், 12ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி காமேஷ்வரன், சிவனடியார்கள், சிவாச்சார்யர்கள் மற்றும் உற்சவ மரபினர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை