ஐகோர்ட் தலைமை நீதிபதியுடன் கவர்னர், முதல்வர் சந்திப்பு
புதுச்சேரி: புதுச்சேரிக்கு வருகை தந்த சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியை கவர்னர், முதல்வர், அமைச்சர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர்.புதுச்சேரிக்கு வருகை தந்த சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஸ்ரீராம் கல்பாத்தி ராஜேந்திரன், கவர்னர் கைலாஷ்நாதனை, மரியாதை நிமித்தமாக கவர்னர் மாளிகையில் சந்தித்துப் பேசினார். முன்னதாக, கவர்னர் பூங்கொத்துடன் தலைமை நீதிபதியை வரவேற்றார்.பின், தலைமை நீதிபதி, முதல்வர் ரங்கசாமி மரியாதை நிமித்தமாக சந்தித்தார். சந்திப்பின்போது சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., தலைமைச் செயலர் சரத் சவுகான், அரசுச் செயலர் கேசவன், புதுச்சேரி தலைமை நீதிபதி சந்திரசேகரன், சட்டச் செயலர் சத்தியமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.