உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உலக சுற்றுலா தின விழா கவர்னர், முதல்வர் பங்கேற்பு

உலக சுற்றுலா தின விழா கவர்னர், முதல்வர் பங்கேற்பு

புதுச்சேரி:புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை சார்பில், உலக சுற்றுலா தின விழா பழைய துறைமுக வளாக மாநாட்டு அரங்கில் நடந்தது. விழாவினை, கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்து, சிறப்புரை யாற்றினார். முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., எம்.பி.க்கள்., வைத்திலிங்கம், செல்வகணபதி, தலைமை செயலர் சரத்சவுகான், சுற்றுலாத்துறை செயலர் மணிகண்டன், இயக்குனர் முரளிதரன் கலந்து கொண்டனர். விழாவின் ஒரு பகுதியாக பல்வேறு சுற்றுலா வல்லுனர்கள் பங்கேற்ற 'சுற்றுலாவும் நிலையான வளர்ச்சியும்' என்ற தலைப்பில் பயிற்சி பட்டறை நடந்தது. தொடர்ந்து படகு போட்டி, சைக்கிள் ரிக் ஷா சவாரி, மருத்துவ முகாம், வரலாற்று சின்னங்கள், பாரம்பரிய சாலைகள் பார்வையிடுதல், திறன் மேம்பாட்டு பயிற்சி, பாண்டி மெரினா, பாரதியார் பல்கலைக்கூட மாணவர்களின் மண் சிற்ப கண்காட்சி நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை