உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அம்பேத்கர் நினைவு தினம் கவர்னர், முதல்வர் மரியாதை..

அம்பேத்கர் நினைவு தினம் கவர்னர், முதல்வர் மரியாதை..

புதுச்சேரி: புதுச்சேரியில் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, அவரது சிலைக்கு கவர்னர், முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.புதுச்சேரியில் அம்பேத்கரின் 68வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, புதுச்சேரி சட்டசபை எதிரே உள்ள, அவரது சிலைக்கு கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ ஜெயக்குமார், சாய் சரவணன் குமார், துணை சபாநாயர் ராஜவேலு, எம்.எல்.ஏ.,க்கள் அங்காளன், கல்யாண சுந்தரம், ரமேஷ், லட்சுமிகாந்தன், பிரகாஷ்குமார், ராமலிங்கம், அசோக்பாபு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பா.ஜ., சார்பில் மாநில தலைவர் செல்வகணபதி மாலை அணிவித்து மரியாதை செய்தார். காங்., சார்பில் மாநில தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் கந்தசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., ஆகியோர் மரியாதை செலுத்தினர்.தி.மு.க., சார்பில் எதிர்க்கட்சித்தலைவர் சிவா, எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார் ஆகியோர் மரியாதை செலுத்தினர். அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன், இ.கம்யூ., சார்பில் மாநில துணை செயலாளர் சேதுசெல்வம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை