உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காரைக்காலில் படகு போட்டி கவர்னர் துவக்கி வைத்தார்

காரைக்காலில் படகு போட்டி கவர்னர் துவக்கி வைத்தார்

காரைக்கால்: உலக மீனவர் தினத்தை முன்னிட்டு காரைக்காலில் நடந்த படகு போட்டியை கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்தார்.மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளத்துறை இணைந்து அரசலாற்றில் கட்டுமரம் போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது. போட்டியை புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் கொடியசைத்து துவக்கிவைத்தார்.காரைக்கால்மேடு, கிளிஞ்சல்மேடு, பட்டிணச்சேரி, கோட்டுச்சேரிமேடு, கீழகாசாகுடிமேடு, மதகடி, மண்டபத்துார் ஆகிய கிராமங்களை சேர்ந்த மீனவர் அணிகள் பங்கேற்றன. இதில் ஒரு கட்டுமரத்தில் 3 பேர் பங்கேற்றனர். அரசலாற்று பாலம் அருகே போட்டி தொடங்கி ஒன்னரை கிலோ மீட்டர் துாரம் சென்று மீண்டும் அதே இடத்திற்கு திரும்பி வந்தனர். மண்டபத்துார் அணி முதலிடம், காளிகுப்பம் அணி இரண்டாமிடம், பட்டிணச்சேரி அணி மூன்றாமிடம் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தேனீ ஜெயக்குமார், சாய்சரவணன் குமார், திருமுருகன், கலெக்டர் மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.போட்டியை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி