உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பள்ளி மாணவியின் திட்ட அறிக்கை கவர்னர் கைலாஷ்நாதன் ஆர்வம்

அரசு பள்ளி மாணவியின் திட்ட அறிக்கை கவர்னர் கைலாஷ்நாதன் ஆர்வம்

புதுச்சேரி: மாணவி கண்டுபிடித்த 'ஸ்மார்ட் மெடிசன் ரிமைன் டர் சிஸ்டம்' குறித்து கவர்னர் ஆர்வமாக கேட்டறிந் தார். முத்தியால்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிரதமர் மோடி டில்லி விஞ்ஞான் பவனில் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் பங்கேற்ற கவர்னர் கைலாஷ்நாதன், பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது மாணவி குணா பாத்திமா காட்சிக்கு வைத்திருந்த 'ஸ்மார்ட் மெடிசன் ரிமைன்டர் சிஸ்டம்' குறித்து கவர்னர் ஆர்வமாக கேட்டறிந்தார். இதுகுறித்து மாணவி குணா பாத்திமா கூறுகையில், டாக்டர் கொடுக்கும் மருந்துகளை நாம் குறித்த நேரத்திற்கு உட்கொள்வது மிகவும் முக்கியம். பெரும்பாலும் வயதானவர்கள் மருந்துகளை குறிப்பிட்ட நேரத்தில் உட்கொள்வதை மறந்து விடுகிறார்கள். யாராவது அவர்கள் அருகில் இருந்து மருந்துகளை கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் அவர்களது பிள்ளைகளுக்கும் அவர்களை பார்ப்பதில் சிரமம் ஏற்படுகிறது. முதியவர்கள் மட்டும் இல்லாமல் ஐ.டி., துறையில் உள்ளவர்களும் மருந்துகளை சரியான நேரத்தில் எடுப்பதில்லை. நான், உருவாக்கிய ரிமைன்டர் சிஸ்டம் பக்கபலமாக இருக்கும். நாம் இதில் மருந்து உட்கொள்ளும் நேரத்தை உள்ளீடு செய்ய வேண்டும். குறித்த நேரத்தில் அது நமக்கு ரிமைன்ட் செய்யும் வகையில் ஒலி எழுப்பும். இதை சாப்ட்வேர் முலம் உருவாக்கியுள்ளேன். மருந்தை உட்கொள்ளவில்லை என்றால் அவர்களது உறவினர்களுக்கு செய்தி அனுப்பும் வகையில் மொபைல் மூலம் இணைத்து செயலாற்றவும், எளிதில் எடுத்து செல்லும் வகையில் உருவாக்கியுள்ளோம். இதன் மூலம் வயதானவர்கள் பயனடைவர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி