மேலும் செய்திகள்
லிப்டில் சிக்கிய கவர்னர்
01-Jun-2025
பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்!
14-Jun-2025
புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள புதிய கட்டடத்திற்கு கவர்னர் கைலாஷ்நாதன் குடியேறியதால், பழைய கவர்னர் மாளிகை தற்காலிக அலுவலகமாக இயங்கி வருகிறது.புதுச்சேரி, ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கவர்னர் மாளிகை கட்டடம், பல இடங்களில் சேதம் அடைந்த நிலையில் இருந்து வருகிறது. இந்த கட்டடத்தை சீரமைக்கும் பணிக்காக புதுச்சேரி பழைய சாராய வளாகத்தில் கட்டப்பட்டிருந்த புதிய கட்டடத்திற்கு கவர்னர் மாளிகை இடம் மாற்றம் செய்யும் பணி கடந்த ஆண்டு துவங்கியது.அதைத் தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், கவர்னர் கைலாஷ்நாதன் புதிய கட்டடத்தில் கிரகப்பிரவேசம் செய்தார். அங்கு கட்டுமான பணிகள் நடந்து வருவதால், பழைய கவர்னர் மாளிகையில் தங்கி, அலுவல் பணிகளை கவனித்து வந்தார். கடந்த 11ம் தேதி இரவு சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் பழைய கவர்னர் மாளிகையில் நீர்க்கசிவு ஏற்படும் சூழல் உருவானது.அதைத்தொடர்ந்து மறுநாள் பழைய கவர்னர் மாளிகையை காலி செய்து விட்டு, கடற்கரை சாலையில் உள்ள புதிய கட்டடத்தின் முதல் தளத்தில் குடியேறினார். புதிய கட்டடத்தின் தரை தளத்தில் கவர்னர் அலுவலகம் அமைப்பதற்கான பணிகள் வேகமாக நடந்து வருவதால், கவர்னரின் தற்காலிக அலுவலகமாக பழைய கவர்னர் மாளிகை இயங்கி வருகிறது.இந்த அலுவலகமும் புதிய கட்டடத்திற்கு இடம் மாறிவிட்டால், கவர்னர் மாளிகை மூடப்பட்டு சீரமைப்பு பணிகள் விரைவில் துவங்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
01-Jun-2025
14-Jun-2025