உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  வங்கிகளுக்கு இன்று விடுமுறை கவர்னர் உத்தரவு

 வங்கிகளுக்கு இன்று விடுமுறை கவர்னர் உத்தரவு

புதுச்சேரி: உழவர் திருநாளை முன்னிட்டு இன்று வங்கிகளுக்கு விடுமுறை அளித்து கவர்னர் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளுக்கும் உழவர் திருநாளுக்கு வரையறுக்கப்பட்ட விடுமுறை நாளாக இருந்தது. அதனை மாற்றி, செலாவணி முறிச்சட்டம் 1881 அடிப்படையில் உழவர் திருநாளுக்கு பொது விடுமுறை நாளாக கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவிட்டுள்ளார். அதனையொட்டி, மாநிலத்தில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் இன்று 17ம் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை, கவர்னர் உத்தரவின்பேரில், சார்பு செயலர் அழகேசன் வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி