மணக்குள விநாயகர் மருத்துவ கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
புதுச்சேரி: மணக்குள விநாயகர் மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் பட்டமளிப்பு விழா நடந்தது.இயக்குநர் ராஜகோவிந்தன் வரவேற்றார். தக் ஷசீலா பல்கலைக்கழக துணைவேந்தர் தனசேகரன் தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினர் ஜெய்ப்பூர் மகாத்மகா காந்தி மருத்துவ அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் ஆச்சல் குலாட்டி மாணவர்களுக்கு தங்கப்பதக்கம், பட்டங்களை வழங்கினார். விழாவில் 150 இளநிலை, 50 முதுநிலை பட்டதாரிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.இளங்கலை மருத்தவ மாணவர் ஜஸ்வந்த்குமார் எம்.பி.பி.எஸ்., படிப்பில் ஒட்டுமொத்தமாக முதலிடம் மற்றும் உடலியல், சமூக மருத்துவம், பொது மருத்துவத்திற்கான தங்க பதக்கம் பெற்றார். டாக்டர் ஆனந்தேஸ்வரி எம்.பி.பி.எஸ்., முதலாம் ஆண்டு முதலிடத்தில் தங்க பதக்கம், காது மூக்கு தொண்டை, பொது அறுவை சிகிச்சை, மகப்பேறியல், மகளிர் மருத்துவம் ஆகியவற்றில் தங்க பதக்கம் பெற்றார். உயிர் வேதியியல், குழந்தை மருத்துவத்தில் டாக்டர் மீனாவுக்கு தங்க பதக்கம் வழங்கப்பட்டது.துணை இயக்குநர் காக்னே, பட்டதாரிகளுக்கான ஹிப்போகிரட்டீஸ் உறுதி மொழி வாசித்தார். தக் ஷசீலா பல்கலைக்கழக இணை வேந்தர் நிலபிரியதர்ஷினி, மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை இணை இயக்குநர் வேலாயுதன், கல்வி பிரிவு டீன் கார்த்திகேயன் வாழ்த்தி பேசினர். மருத்துவ கண்காணிப்பாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.