மேலும் செய்திகள்
உலர்களம் அமைக்க கோரிக்கை
07-Apr-2025
பாகூர்: குருவிநத்தம் கிராமத்தில் தானிய கிடங்குடன் கூடிய உலர் களத்தை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், பாகூர் தொகுதி, குருவிநத்தம், புறாந்தொட்டி பகுதியில், 29 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் செலவில், தானியக் கிடங்குடன் கூடிய உலர் களம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது. அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திகேசன் தலைமை தாங்கினார். விவசாயி முத்து வரவேற்றார். பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சதாசிவம் வாழ்த்தி பேசினார். சிறப்பு விருந்தினராக செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு தானியக் கிடங்குடன் கூடிய உலர் களத்தை திறந்து வைத்தார்.உதவி பொறியாளர் ராமன், இளநிலை பொறியாளர் சிவப்பிரகாசம், கிராம திட்ட ஊழியர் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். விவசாயி தவமுருகன் நன்றி கூறினார்.
07-Apr-2025