கிராம சபை கூட்டம்
நெட்டப்பாக்கம் : குடியரசு தினத்தை முன்னிட்டு, நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில்,11 கிராமங்களில் கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது.செம்பியப்பாளையம் கிராம பஞ்சாயத்துக்கு நடந்த கூட்டத்திற்கு, ஆணையர் ரமேஷ் தலைமை தாங்கினார். இதில், பங்கேற்ற பொது மக்கள் செம்பியப்பாளையம்கிராமத்தின் சாலைகளை சீரமைக்க வேண்டும். குடிநீர் பற்றாக்குறை போக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவாக ஆணையரிடம் வழங்கினர். மனுவினை பெற்றுக் கொண்ட ஆணையர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.இதேபோல், கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட 10கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடந்தது.