உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரியாங்குப்பத்தில் கிராம சபை கூட்டம்

அரியாங்குப்பத்தில் கிராம சபை கூட்டம்

அரியாங்குப்பம்: சுதந்திர தினத்தையொட்டி, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட 14 பஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டம் நடந்தது. அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து, பூரணாங்குப்பம் அங்காளபரமேஸ்வரி கோவிலில் ஆணையர் விநாயமூர்த்தி தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. உள்ளாட்சித்துறை பார்வையாளர் கார்த்திகேயன், போக்குவரத்துத்துறை துணை மோட்டார் வாகன ஆய்வாளர் அலக்ஸ் ஆன்ரோஸ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.  அதே போல், அரியாங்குப்பம் பி.சி.பி., நகர் சமுதாய நலக்கூடம், ஆர்.கே. நகர், கிராம பஞ்சாயத்து அலுவலகம் அருகில், வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவிலில் கிராமசபை கூட்டங்கள் நடந்தன. மேலும், மணவெளி புருேஷாத்தமன் சமுதாய நலக்கூடம் எதிரில், நோணாங்குப்பம் அரசு துவக்கப்பள்ளி, ஆண்டியார்பாளையம் மாரியம்மன் கோவில் அருகில், நல்லவாடு சமுதாய நலக்கூடம், அபிேஷகப்பாக்கம் அம்பேத்கர் சமுதாய நலக்கூடம், டி.என்.பாளையம் சமுதாய நலக்கூடம் எதிரில் கிராம சபை கூட்டங்கள் நடந்தன. இக்கூட்டங்களில் கிராம மக்கள் பங்கேற்று அடிப்படை மற்றும் பல்வேறு பிரச்னைகள் குறித்து அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை