உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரியாங்குப்பம் கொம்யூனில் 26ம் தேதி கிராம சபை கூட்டம்

அரியாங்குப்பம் கொம்யூனில் 26ம் தேதி கிராம சபை கூட்டம்

அரியாங்குப்பம் : குடியரசு தினத்தை முன்னிட்டு, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட, 14 இடங்களில் வரும் 26ம் தேதி கிராமசபை கூட்டம் நடக்கிறது.இதுகுறித்து, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:குடியரசு தினத்தையொட்டி வரும் 26ம் தேதி, மத்திய அரசின், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட 14 இடங்களில், கிராமசபை கூட்டம், வரும் 26ம் தேதி நடக்கிறது.அதில், அரியாங்குப்பம் மேற்கு கிராம பஞ்சாயத்து, பி.சி.பி., நகர், சமுதாய நலக்கூடம், கிழக்கு பஞ்சாயத்து, அரியாங்குப்பம் கொம்யூன் அலுவலகம் எதிரில், ஆர்.கே., நகர் பஞ்சாயத்து அலுவலகம், காக்காயந்தோப்பு மாரியம்மன் கோவில் அருகில், வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில், மணவெளி புருேஷாத்தமன் சமுதாய நலக்கூடம் எதிரில், நோணாங்குப்பம் அரசு துவக்கப்பள்ளி, நல்லவாடு சமுதாய நலக்கூடம், அபிேஷகப்பாக்கம், டி.என்., பாளையம் சமுதாய நலக்கூடம் அருகில் உள்ளிட்ட இடங்களில், அன்று காலை 10:00 மணி முதல் 11:00 மணி வரை நடக்கிறது.கூட்டத்தில், அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். மக்கள் பொது பிரச்னைகளை நேரில் தெரிவிக்கலாம்.இவ்வாறு ஆணையர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை