மேலும் செய்திகள்
ரூ1.22 லட்சம் மோசடி
13-Oct-2026
கள்ளக்குறிச்சி மாவட்டம், வரஞ்சரம் அடுத்த நின்னையூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன், 65; இவர், கடந்த 2021-26ம் ஆண்டு வரை ஊராட்சி தலைவராக பதவி வகித்தவர். இவருக்கும், இவரது தம்பி சக்திவேல் மகன் தணிகைவேல், 30; என்பவருக்கும் இடையே பொது கிணற்றில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. ஊர் முக்கியஸ்தர்கள் பேசி, ஒரு நளைக்கு ஒருவர் தண்ணீர் இறைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்து, அதன்படி தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நின்னையூர் பெரியநாயகி அம்மன் கோவில் அருகே சிறிய பாலத்தில் பாலசுப்ரமணியனுக்கும் தணிகைவேலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, தணிகைவேல் ஆத்திரமடைந்து பாலசுப்ரமணியனை திட்டி கீழே நெட்டித் தள்ளினார். இதில், பாலத்தின் மேலே இருந்து 5 அடி பள்ளத்தில் விழுந்த பாலசுப்ரமணியனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் பாலசுப்ரமணியனை மீட்டு எலவனாசூர்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே பாலசுப்ரமணியன் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்த புகாரின் பேரில், வரஞ்சரம் போலீசார், வழக்குப் பதிந்து தணிகைவேலை கைது செய்தனர்.
13-Oct-2026