மேலும் செய்திகள்
நலத்திட்ட உதவிகள் வழங்கல்
23-Sep-2024
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதி தி.மு.க., சார்பில் பவள விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள், அனிபால்கொன்னடி, செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். விழாவில் தொகுதியை சேர்ந்த ஏழை மக்களுக்கு வேட்டி, சேலை, தள்ளுவண்டி, பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னாள் கவுன்சிலர் சக்திவேல் நன்றி கூறினார்.
23-Sep-2024