உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வில்லியனுாரில் பசுமை பந்தல்; சேவை மன்றம் கோரிக்கை

வில்லியனுாரில் பசுமை பந்தல்; சேவை மன்றம் கோரிக்கை

புதுச்சேரி; வில்லியனுார் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க வில்லியனுார் லால்பகதுார் சாஸ்திரி சமூக சேவை மன்றத்தின் நிறுவனர் கலியமுருகன் கேட்டுக் கொண்டுள்ளார்;அவரது அறிக்கை:பொதுமக்கள் நலன் கருதி, புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பல்வேறு சிக்னல்களில் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து அவர்களை பாதுகாக்க ஆங்காங்கே பசுமைபந்தல் அமைக்கப்பட்டது. அதேபோல் புதுச்சேரிக்கு அடுத்த வளர்ந்து வரும் நகரம் வில்லியனுாரில் அமைந்துள்ள போக்குவரத்து சிக்னல்கள் குறிப்பாக மூலக்கடை எம்.ஜி.ஆர்., சிலை சந்திப்பு மற்றும் கூடபாக்கம் புறவழிச்சாலை சந்திப்பு சிக்னலில் அவசியம் பசுமை நிழற்பந்தல் அமைக்க பொதுப்பணித்துறை விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை