உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இ.எஸ்.ஐ., மண்டல அலுவலகத்தில் 14ம் தேதி குறை தீர்வு முகாம்

இ.எஸ்.ஐ., மண்டல அலுவலகத்தில் 14ம் தேதி குறை தீர்வு முகாம்

புதுச்சேரி: தொழிலாளர் அரசு காப்பீட்டுக்கழக மண்டல அலுவலகத்தில் (இ.எஸ்.ஐ.) வரும் 14ம் தேதி, குறை தீர்வு முகாம் நடக்கிறது. புதுச்சேரி அரசு காப்பீட்டுக்கழக மண்டல இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; புதுச்சேரி அரசு காப்பீட்டுக்கழக மண்டல அலுவலகத்தில், மாதந்தோறும் 2வது புதன் கிழமையில் குறைதீர்வு முகாம் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வரும் 14ம் தேதி, மதியம் 3:30 மணியளவில் குறைதீர்வு முகாம் நடக்கிறது. எனவே, தொழிலாளர்கள், பயனாளிகள், தொழில் முனைவோர்கள், கலந்து கொண்டு தங்கள் இ.எஸ்.ஐ., தொடர்பான கோரிக்கைகள் இருந்தால் அவற்றை விரிவாக ஒர் கடிதத்தில் குறிப்பிட்டு தக்க ஆணங்களுடன் சமர்ப்பிக்கலாம். கோரிக்கை மனு மீது உடனடியாக தீர்வு காணப்படும் என, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை