மேலும் செய்திகள்
குட்கா விற்றவர் கைது
06-Jan-2025
புதுச்சேரி : ரெட்டியார்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது பூமியான்பேட் பாவனர் நகர் பகுதியில் தடைசெய்யப்பட்ட குட்கா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அங்கு போலீசார் விரைந்து சென்றனர்.அப்போது பெத்துசெட்டிப்பேட் முருகன் கோவில் தெருவைச் சேர்ந்த சிவகுமார் 40, என்பவர், தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களைகடைகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
06-Jan-2025