உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  குட்கா விற்றவர் கைது

 குட்கா விற்றவர் கைது

புதுச்சேரி: பெட்டிக்கடையில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி ரங்கபிள்ளை தெருவில் குட்கா விற்பதாக பெரியகடை போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. அதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார், அந்த பகுதியில் இருந்த பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். கடையில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்ததை போலீசார் கண்டறிந்தனர். கடையில் இருந்து 1000 ரூபாய் மதிப்புள்ள குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து, கடை உரிமையாளர் லாஸ்பேட்டை, சேர்ந்த தியாகராஜனை, 45; கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை