உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குட்கா பொருட்கள் விற்றவர் கைது

குட்கா பொருட்கள் விற்றவர் கைது

புதுச்சேரி: தனியார் நர்சிங் கல்லுாரி அருகில் குட்கா பொருட்கள் விற்றவரை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ரெட்டியார்பாளையம் போலீஸ் சிறப்பு உதவி சப்இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையிலான போலீசார் நேற்று (நவ.,1) மூலகுளம் பாரிஸ் நகர் பகுதியில், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள பெட்டிக்கடையில் குட்கா பொருட்கள் விற்பதாக போலீசார் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்குள்ள தனியார் நர்சிங் கல்லுாரி அருகில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் சோதனை செய்ததில் அங்கு குட்கா பொருட்களை பதுக்கி விற்பனை செய்த மூலகுளம் ஜோசப்பாலு,47; கைது செய்து, ரூ.1050 மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ