உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரூ.4 லட்சம் குட்கா பறிமுதல் முதலியார்பேட்டையில் 4 பேர் கைது

ரூ.4 லட்சம் குட்கா பறிமுதல் முதலியார்பேட்டையில் 4 பேர் கைது

புதுச்சேரி: வீடு வாடகை எடுத்து தடை செய்யப்பட்ட போதை பொருட்களை, மாணவர்களுக்கு விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.முருங்கப்பாக்கம் அரசு கேட்டரிங் கல்லுாரி அருகே மகாலட்சுமி நகரில் ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக, முதலியார்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த வீட்டை நேற்று முன்தினம் சோதனை செய்தனர்.போலீசாரை கண்டதும் அங்கிருந்த 4 பேர் கொண்ட கும்பல் தப்பியோட முயற்சி செய்த போது, அவர்களை மடக்கி பிடித்தனர். வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.விசாரணையில் ஹைராபாத்தை சேர்ந்த விஜயகுமார், 43; திருநெல்வேலி சித்திரகுமார், 33; சென்னை, சோழிங்கநல்லுார் சந்தானராஜ், 42; ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சுரேஷ், 34, ஆகியோர் என்பது தெரியவந்தது. சித்திரகுமார், சுரேஷ் ஆகியோர் மூலம் குட்கா பொருட்களை வெளி மாநிலங்களில் இருந்து வாங்கி வந்தது, அதனை வாடகை வீடு எடுத்து பதுக்கி வைத்து, கல்லுாரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரிந்தது.இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விஜயகுமார் உட்பட 4 பேரை கைது செய்து, ஒரு கார், 7 மொபைல் போன், 43 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை