மணக்குள விநாயகர் கல்லுாரியில் ஹாக்கத்தான் தொழில்நுட்ப நிகழ்வு
புதுச்சேரி : மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியின் வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு, 48 மணி நேர தொடர் ஹாக்கத்தான் தொழில்நுட்ப நிகழ்வு நடந்தது.துவக்க விழாவிற்கு, தக்சஷீலா பல்கலைக்கழக வேந்தர், மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் தனசேகரன், செயலாளர் நாராயணசாமி, பொருளாளர் ராஜராஜன், இணை செயலாளர் வேலாயுதம், கல்லுாரி இயக்குனர் வெங்கடாசலபதி முன்னிலை வகித்தனர்.இதில், பன்னாட்டு மென்பொருள் நிறுவனர்கள் சரண்குமார், பிரசாந்த் கலந்து கொண்டனர். இந்திய முழுதும் இருந்து 105 தலை சிறந்த கல்லுாரி மற்றும் பல்கலைக்கழகத்தை சார்ந்த 650 மாணவர்கள் மின் விண்ணப்பம் மூலம் பதிவு செய்து, மென்பொருள் ஆய்வு அறிக்கை சமர்ப்பித்து, குழுக்களாக கல்லுாரியில் நடந்த 48 மணி நேர ஹாக்கத்தான் நிகழ்வில் பங்கேற்றனர். இதில், திருச்சி கொங்குநாடு பொறியியல் மற்றும தொழில்நுட்ப கல்லுாரியின் மாணவர் குழு முதல் பரிசாக ரூ. 60,000 பெற்றது. மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி மாணவர் குழு இரண்டாம் பரிசாக 40,000, பெங்களூரு, பூஸநாயனான முகுந்ததாஸ் ஸ்ரீநீவாசையா பொறியியல் கல்லுாரி மாணவர் குழு மூன்றாம் பரிசாக 20,000 ரூபாய் பெற்றன.மேலும், ஏழு கல்லுாரி மாணவர் குழுக்களுக்கு தலா ரூ. 5,000 ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. முதல் மூன்று பரிசுகளை வென்ற மாணவர் குழுக்கள் 2025ம் ஆண்டு துபாயில் நடக்கும் உலகளாவிய போட்டியில் பங்குபெற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.ஏற்பாடுகளை துறைத் தலைவர் ராஜூ மற்றும் இணை பேராசிரியர் சுரேஷ் செய்திருந்தனர்.