உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  எஸ்.ஐ., தேர்வுக்கு ஹால் டிக்கெட்

 எஸ்.ஐ., தேர்வுக்கு ஹால் டிக்கெட்

புதுச்சேரி: சப் இன்ஸ்பெக்டர் பதவி எழுத்து தேர்வுக்கான ஹால் டிக்கெட் பதிவிறக்கம் நேற்று முதல் துவங்கியது. புதுச்சேரி காவல் துறையில் காலியாக உள்ள சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்துத் தேர்வு வரும் 22ம் தேதி புதுச்சேரியில் 4 மையங்களில் நடக்கிறது. இத்தேர்வுக்கான அனுமதி சீட்டை, தேர்வர்கள் https://recruitment.py.gov.inஎனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேற்று (13ம் தேதி) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது தொடர்பான விவரங்களுக்கு தேர்வர்கள் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை 0413-2233338 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதற்கான அறிவிப்பை அரசு சார்பு செயலர் முருகேசன் வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை