உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கைப்பந்து போட்டி பரிசளிப்பு

கைப்பந்து போட்டி பரிசளிப்பு

திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு எம்.பிரதர்ஸ் கைப்பந்து அணி சார்பில், 6ம் ஆண்டு மாநில அளவிலான கைப்பந்து போட்டி, திரவுபதியம்மன் கோவில் திடலில் நடந்தது. இப்போட்டியில், புதுச்சேரி மற்றும் தமிழகத்தை சேர்ந்த 32 அணிகள் கலந்து கொண்டன. இதில், பல்வேறு பிரிவுகளாக நடந்த போட்டியில், மண்ணாடிப்பட்டு எம்.பிரதர்ஸ் அணியும், மணலிப்பட்டு டிரென்டிங் அணியும் இறுதி போட்டியில் மோதியது. மண்ணாடிப்பட்டு அணி முதலிடத்தையும், மணலிப்பட்டு அணி இரண்டாம் இடத்தையும், அருண் பிரதர்ஸ் அணி மூன்றாம் இடத்தையும் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழாவில், அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்று, முதல் பரிசாக ரூ.30 ஆயிரம் மற்றும் கோப்பையை அணி வீரர்களுக்கு வழங்கினார். இரண்டாம் பரிசாக மணலிப்பட்டு அணிக்கு ரூ. 25 ஆயிரம் வழங்கப்பட்டது. விழாவில், கூட்டுறவு சங்கத் தலைவர் தமிழ்மணி, வீரராகவன், திருக்கனுார் லயன்ஸ் சங்கத் தலைவர் இளங்கோவன், வட்டாரத் தலைவர் முகமது அசாருதீன், கணேஷ், பிரகாஷ், மணிகண்டன், கோவிந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ