உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எறிபந்து போட்டிகள் 24ம் தேதி நடக்கிறது

எறிபந்து போட்டிகள் 24ம் தேதி நடக்கிறது

திருக்கனுார்; குமாரப்பாளையத்தில் ஈஷா கிராமட்சவம் கிராமப்புற மகளிர் அணிகளுக்கான எறிபந்து போட்டிகள் வரும் 24ம் தேதி நடக்கிறது. கோயம்புத்துார் ஈஷா யோகா மையம் சார்பில் ஆண்டுதோறும் கிராமப்புற மகளிர்களிடையே விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில் 'ஈஷா கிராமட்சவம்' பெயரில் பல்வேறு விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகிறது. இந்தாண்டிற்கான ஈஷா கிராமட்சவம் விளையாட்டு போட்டிகளில், 24 முதல் 45 வயதிற்குட்பட்ட கிராமப்புற மகளிர் அணிகள் பங்கேற்கும் மாநில அளவிலான எறிப்பந்து போட்டி, திருக்கனுார் அடுத்த குமாரப்பாளையம் விநாயகர் கோவில் மைதானத்தில் வரும் 24ம் தேதி நடக்கிறது. இப்போட்டியில் பங்கேற்க குமாரப்பாளையம், தேத்தாம்பாக்கம், சுத்துக்கேணி, திருக்கனுார், சந்தை புதுக்குப்பம், கூடப்பாக்கம், கைக்கிலப்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 12 மகளிர் அணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.முன்பதிவு செய்துள்ள மகளிர் அணிகளுக்கு, புதுச்சேரி நகரப்பகுதிகளில் இருந்து பயிற்சியாளர்கள் வரவழைக்கப்பட்டு, மாலை நேரங்களில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இப்போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ள கிராமப்புற மகளிர்கள் தங்களது அணிகளை சோமசுந்தரம் - 90874 39123 என்ற எண்ணில் வரும் 16ம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை