மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
10 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
10 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
11 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
11 hour(s) ago
புதுச்சேரி : புதுச்சேரி காந்தி திடலில் பல்வேறு மாநில கைவினைப் பொருட்களின் கண்காட்சியை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.இந்திய கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுத் துறையின் கைவினை கவுன்சில் கீழ் புதுச்சேரி கைவினைக் கவுன்சில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்த அமைப்பு புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த கைவினைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகிறது. புதுச்சேரி கைவினைக் கவுன்சில், இன்டாக் இணைந்து புது வசந்தம் என்ற பெயரில் நேற்று 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை மூன்று நாள் கைவினைப் பொருட்கள், கைத்தறிகள் மற்றும் வீட்டு அலங்கார பொருட்கள் கண்காட்சியை காந்தி திடலில் ஏற்பாடு செய்துள்ளது.கண்காட்சியை வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் துவக்கி வைத்து, ஸ்டால்களை பார்வையிட்டார். பத்மஸ்ரீ விருதாளர் முனுசாமி, புதுச்சேரி கைவினைக் கவுன்சில் செயலர் சித்தாரா நாயர் கலந்து கொண்டனர்.கண்காட்சியில் 40க்கும் மேற்பட்ட கைவினைஞர்களின் பிரத்யேகமான கலை பொருட்கள் தொகுத்து வைக்கப்பட்டுள்ளது.மதுராவில் இருந்து சாஞ்சி கலை, செட்டிநாடு புடவைகள், குஜராத்தில் இருந்து அஜ்ரக் இயற்கை சாயம் பூசப்பட்ட ஆடைகள், கொல்கத்தாவில் இருந்து காந்தா பாடிக், கேரளா சுவரோவியங்கள், காளஹஸ்தியில் இருந்து பெள் கலம்காரி, அனந்தபூர் நம்மலகுண்டா தோல் விளக்குகள், டிசைனர் மீளகாரி சைக்கிள் மரத்துாள், ஜெய்ப்பூர் கைவினைப்பொருட்கள், பப் லெதர் பைகள் விற்பனைக்கும் காட்சிக்கும் வைக்கப்பட்டுள்ளன.
10 hour(s) ago
10 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago