உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காங்., கையெழுத்து இயக்கம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி

காங்., கையெழுத்து இயக்கம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி

புதுச்சேரி: லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி அறிவுறுதலின் பேரில், ராஜ்பவன் தொகுதியில் வாக்குத் திருட்டுக்கு எதிரான கையெழுத்து பெறப்பட்டு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொகுதியில் உள்ள 24 பூத் மக்களிடம் காங்., நிர்வாகிகள் சென்று வாக்கு திருட்டு குறித்து மக்களிடம் எடுத்துரைத்து மொத்தம் 14 ஆயிரத்து 140 கையெழுத்து பெறப்பட்டது. அதனை நேற்று புதுச்சேரி காங்., தலைமை அலுவலகத்தில் வட்டார காங்., தலைவர் ஜெரார்டு, ராஜமோகன் தலைமையில் காங்., மாநில தலைவர் வைத்தியலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, கையெழுத்து இயக்கம் தலைமை பொறுப்பாளர் அனந்தராமன் ஆகியோரிடம் வழங்கப்பட்டது. அப்போது, காங்., சீனியர் துணை தலைவர் தேவதாஸ், கிழக்கு மாவட்ட தலைவர் வேல்முருகன், காமராஜ் நகர் தொகுதி பொறுப்பாளர் மருது பாண்டியன், முன்னாள் கவுன்சிலர் குமரன், ராஜ்பவன் தொகுதி பொறுப்பாளர்கள் விஜயகுமாரி, விநாயகமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, நாகேஷ் , மனிஷ் மற்றும் தொகுதி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை