உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கல்லுாரியில் சேர்ந்து படிக்க வயது தளர்வு வழங்கல் காரைக்கால் கலெக்டரின் முயற்சியால் மகிழ்ச்சி

கல்லுாரியில் சேர்ந்து படிக்க வயது தளர்வு வழங்கல் காரைக்கால் கலெக்டரின் முயற்சியால் மகிழ்ச்சி

காரைக்கால் : காரைக்காலில் கல்லுாரி சேர்வதற்கு வயது தளர்வு வழங்கும் ஆணையை கலெக்டர் மணிகண்டன் வழங்கினார்.காரைக்கால் திருப்பட்டினம் பகுதியை சேர்ந்த நூருல் சிதிக்கா 22 இவர் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டர் மணிகண்டனை சந்தித்து வறுமை மற்றும் குடும்ப சூழல் காரணமாக பள்ளிப் படிப்பு முடித்த பிறகு கல்லுாரி பட்டப்படிபை தொடர முடியவில்லை. தற்பொழுது 21வயதை கடந்து விட்டதால் கல்லுாரியில் சேர்ந்து பயில்வதற்கு வயது வரையறை காரணமாக படிக்க முடியாத நிலை உள்ளது.எனவே கல்லுாரியில் சேர்ந்து படிப்பதற்கு வயது வரம்பபை தளர்த்தி கல்லுாரியில் சேர்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதுப்போல் காரைக்காலை சேர்ந்த பிலோமினா மேரி, திருப்பட்டினத்தை சேர்ந்த அருள்ராஜ் ஆகியோர் கல்லுாரி கல்வி தொடர முடியாமல் இருப்பது தெரியவந்தது. இது குறித்து கலெக்டர் மணிகண்டன் முயற்சியால் புதுச்சேரி உயர்கல்வித்துறை இயக்குனரும் சென்டாக் ஒருங்கிணைப்பாளருமான அமன் சர்மாவுக்கு கடிதம் எழுதினார்.உயர்கல்வி செயலர் மற்றும் இயக்குனர் ஜவகர் ஆகியோர் மூன்று பேருக்கும் கல்லுரியில் சேர்ந்து படிக்க வயது தளவு வழங்கி உத்தரவிட்டனர்.இதனைத் தொடர்ந்து நூருல் சிதிக்கா, பிலோமினாமேரி, அருள்ராஜ் ஆகிய மூவருக்கு சேர்க்கைகான ஆணையை கலெக்டர் வழங்கினார்.கலெக்டர் மணிகண்டன் கூறுகையில், படிப்பை தொடர்வதற்கு வயது ஒரு தடையாக இருக்கக் கூடாது, நல்ல முறையில் கல்வி கற்று மேலும் மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்தினர். உடன் கலெக்டர் அலுவலக கண்காணிப்பாளர் பாலு உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி