உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சுகாதார விழிப்புணர்வு முகாம்

 சுகாதார விழிப்புணர்வு முகாம்

பாகூர்: உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு, பிள்ளையார்குப்பம் பாலாஜி வித்யாபீத் பல்கலைக்கழக மருந்தியல் கல்லுாரி சார்பில், மணமேடு கிராமத்தில் சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமில், பங்கேற்றவர்களுக்கு, ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு, நீரிழிவு பாத புண், மன அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு, ஆலோசனைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், கரையாம்புத்துார் அரசு மருத்துவமனை டாக்டர் ராஜேஸ்வரன், செவிலியர் சுகன்யா, கிராம சமூகப்பணியாளர் ரங்கநாதன் ஆகியோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மருந்தியல் நடைமுறைத் துறை பேராசிரியர் ராமம் ஸ்ரீபாதா, ஒருங்கிணைப்புச் செயலாளர் டாக்டர் வான்மதி, உறுப்பினர் காயத்ரி மற்றும் முதுநிலை மாணவர்கள் செய்திருந்தனர். வழிகாட்டிய பல்கலைக் கழக வேந்தர் ராஜகோபாலன், துணைவேந்தர் நிஹார் ரஞ்சன் பிஸ்வாஸ், பதிவாளர் ஸ்ரீநிவாசன், சுகாதார, மருத்துவமனை மற்றும் வெளிப்பணி சேவைகள் இயக்குநர் பேராசிரியர் நிர்மல்குமார், மருத்துவ சேவைகள் இயக்குநர் ஸ்வாதி ஜே பவார், மருந்தியல் கல்லுாரி முதல்வர் பேராசியர் சண்முகநாதன் ஆகியோருக்கும் மற்றும் அனுமதி வழங்கிய சுகாதார துறை துணை இயக்குநர் ஷமீமுனிசா பேகம் ஆகியோருக்கு, மருந்தியல் கல்லுாரி சார்பில், நன்றி தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி