உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சுகாதாரத்துறை வாரிசுதாரர்கள் இயக்குநர் அலுவலகம் முற்றுகை

சுகாதாரத்துறை வாரிசுதாரர்கள் இயக்குநர் அலுவலகம் முற்றுகை

புதுச்சேரி : சுகாதாரத்துறை வாரிசுதாரர்கள் இயக்குநரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.புதுச்சேரி சுகாதாரத்துறை ஊழியர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி இயக்குனர் அலுவலகம் முன், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.சுகாதாரத்துறை வாரிசுத்தாரர்களுக்கு பணி வழங்க வலியுறுத்தி, பல கட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சுகாதாரத்துறை நிர்வாகியை இடம் மாற்றம் செய்துள்ளதை கண்டித்து சுகாதாரத்துறை ஊழியர்கள் இயக்குநர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.இதனால் சுகாதாரத்துறை இயக்குநர் ரவிச்சந்திரன், அவரது அறையில் இருந்து வெளியே வரமுடியாமல் இருந்தார். தகவலறிந்த பெரியக்கடை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் வாரிசுத்தாரர் பட்டியல் புதன்கிழமை வெளியிடுவதாகவும், சுகாதாரத்துறை நிர்வாகி இடமாற்றத்தை ரத்து செய்வதாக இயக்குனர் உறுதி அளித்ததாக கூறினர். போராட்டத்தில் ஈடுபட்டோர் அதனை ஏற்காமல் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.இரவு 9:00 மணிக்கு சுகாதாரத்துறை இயக்குநர் அங்கிருந்து புறப்பட்டார். இருப்பினும் வாரிசுதாரர்கள் சுகாதாரத்துறை இயக்குநர் பட்டியல் இன்று பகல் 12:00 மணிக்குள் வெளியிட வேண்டும். சுகாதார ஊழியர் பொதுச்செயலர் ஜவகர் இடமாற்றம் ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என சுகாதாரத்துறை அலுவலகத்தில் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை