உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி அரசு பணி வயது தளர்வு வழக்கில் கவர்னருக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

புதுச்சேரி அரசு பணி வயது தளர்வு வழக்கில் கவர்னருக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

புதுச்சேரி: அரசு பணிக்கு வயது தளர்வு வழக்கில் இரண்டு வாரத்திற்குள் கவர்னர் முடிவெடுக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.புதுச்சேரி அரசு துறைகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நேரடி நியமனங்கள் செய்யப்படவில்லை. என்.ஆர்.காங்., - பா.ஜ., அரசு பொறுப்பேற்ற பிறகு துணை தாசில்தார், பார்மாசிஸ்ட், ெஹல்த் அசிஸ்டண்ட், வி.ஏ.ஓ., கிராம உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நேரடியாக நிரப்ப விண்ணப்பங்கள் ஆன்லைனில் பெறப்பட்டன. ஆனால் எந்த அறிவிப்பிலும் வயது வரம்பு தளர்வு அறிவிக்கப்படவில்லை.இதனால், பாதிக்கப்பட்ட பட்டதாரி இளைஞர்கள், சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தை அணுகி வருகின்றனர். இதேபோல் சுகாதார துறையின் பார்மாசிஸ்ட் பதவிற்கு வயது வரம்பில் தளர்வு கேட்டு சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.அதில் பல ஆண்டுகளாக புதுச்சேரியில் அரசு வேலைவாய்ப்பு இல்லாத நிலையில், ஒருமுறை வாய்ப்பாக வயது தளர்வு தர வேண்டும். ஆன்லைனில் மட்டும் அல்லாமல் நேரடியாக விண்ணப்பத்தை பெற்று எங்களை நேரடி நியமனத்திற்கான போட்டி தேர்வினை அனுமதிக்க வேண்டும் என, மனுவில் கோரிக்கை வைத்திருந்தனர்.இவ்வழக்கு, கடந்த 1ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க மத்திய நிர்வாக தீர்ப்பாயம் மறுத்துவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் ரிட் மனுதாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு நீதிபதிகள் ரமேஷ் மற்றும் லட்சுமிநாராயணன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஞானசேகரன் ஆஜரானார். அப்போது கடந்த 10 ஆண்டுகளாக அரசு பணிக்கு நேரடி நியமனம் நடத்தப்படாத நிலையில், இவர்களுடைய கோரிக்கையை ஏன் பரிசீலனை செய்ய கூடாது. இந்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.அதற்கு அரசு வழக்கறிஞர், அந்த மனுக்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மத்திய நிர்வாக தீர்ப்பாயம் இந்த மனுக்களை தள்ளுபடி செய்துள்ள சூழ்நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என தெரிவித்தனர்.அதை கேட்ட நீதிபதிகள், மனுதாரர்களின் கோரிக்கையை இரண்டு வாரத்திற்குள் கவர்னர் பரிசீலனை செய்து, உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என, உத்தரவிட்டு, வழக்கை வரும் 28ம் தேதி ஒத்தி வைத்தனர்.

கவர்னருக்கு உத்தரவு ஏன்

புதுச்சேரி அரசின் குரூப்-சி பணியை பொருத்தவரை வயது தளர்வு அளிக்க கூடிய அதிகாரம் கவர்னருக்கு மட்டுமே உள்ளது. எனவே தான் தலைமை செயலருக்கு உத்தரவு பிறப்பிக்காமல், கவர்னர் இரண்டு வாரத்திற்குள் முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை