மேலும் செய்திகள்
தொடர் மருத்துவ கருத்தரங்கு
14-Oct-2026
புதுச்சேரி: புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லுாரியில், எச்.ஐ.வி., விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் நடந்த கருத்தரங்கினை, சுகாதாரத்துறை இயக்குனர் செவ்வேள் துவக்கி வைத்தார். எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குனர் சிவராமன் வரவேற்றார். இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லுாரி இயக்குனர் உதயசங்கர் முன்னிலை வகித்தார். இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லுாரி டாக்டர்கள் பிரகாஷ், ரெம்யா ஆகியோர் எச்.ஐ.வி., குறித்து பேசினர். அப்போது, எச்.ஐ.வி., பரவும் வழிகள், பால்வினை நோய் தொற்று குறித்த விஷயங்கள் மற்றும் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ள சட்டப் பாதுகாப்புகள், எச்.ஐ.வி., தொற்று உள்ளோருக்கு வழங்கப்படுகின்ற அரசு உதவிகள், ஐ.இ.சி., விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது குறித்து விளக்கமளிக்கப்பட்டது. கருத்தரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் தொண்டு நிறுவனங்களின் குழந்தைகள் பாதுகாப்பு சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
14-Oct-2026