மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்றும் விடுமுறை
03-Dec-2024
புதுச்சேரி: கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று 12ம் தேதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.அதனையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
03-Dec-2024