பஞ்சாப் நேஷனல் வங்கியில் வீட்டுக்கடன் கண்காட்சி
புதுச்சேரி : புதுச்சேரி பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில், வீட்டுக் கடன் கண்காட்சி வெங்கட்டா நகரில் உள்ள புதுவை தமிழ் சங்க வளாகத்தில நேற்று முன்தினம் துவங்கியது. கிரடாய் அமைப்பின் தலைவர் தங்கமணிமாறன் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார். பஞ்சாப் நேஷனல் வங்கி துணை வட்டார தலைவர் கிரிஷ்நாயர் தலைமை தாங்கினார்.வங்கி கிளை மேலாளர் சித்தார்த்தன், வெங்கடேஷ் உட்பட பல்வேறு கிளைகளில் இருந்து மேலாளர்கள், ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கண்காட்சியில் பிரபல கட்டுமான நிறுவனங்கள், சூரிய சக்தி கூரை கட்டமைப்பாளர்கள் சார்பில், 10 ஸ்டால்கள் அமைக்கப்பட்டு இருந்தன.கண்காட்சியில், பஞ்சாப் நேஷனல் வங்கியில் வாடிக்கையாளர்களுக்கு, வீட்டுக் கடன்களில் வழங்கப்படும் சிறப்பு அம்சங்கள், வட்டி விபரம், மேற்கூரை சோலார் அமைப்பதற்கான கடன் வசதி உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. வீட்டுக்கடன் தொடர்பாக மேலும் விபரம் அறிய 9994187764, 9597080370 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்.