உள்துறை அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி மாற்றம்
புதுச்சேரி: உள்துறை அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின், பாதுகாப்பு அதிகாரியாக இன்ஸ்பெக்டர் தன்வந்திரி பணியாற்றி வந்தார். இந்நிலையில், இன்ஸ்பெக்டர் தன்வந்திரி, போக்குவரத்து (தெற்கு) பகுதிக்கு நேற்று திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.அங்கு பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் கணேசன், உள்துறை அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை போலீஸ் தலைமையக எஸ்.பி., சுபம்கோஷ் வெளியிட்டுள்ளார்.