உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  வீடு கட்ட தவணை வழங்கும் நிகழ்ச்சி

 வீடு கட்ட தவணை வழங்கும் நிகழ்ச்சி

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் தொகுதியில் வீடு கட்டும் பயனாளிகளுக்கு, தவணை தொகை பெறுவதற்கான ஆணையினை துணை சபாநாயகர் ராஜவேலு வழங்கினார். புதுச்சேரி குடிசை மாற்று வாரியம் மூலம், நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த வீடு கட்டும் பயனாளிகளுக்கு இரண்டு மற்றும் மூன்றாம் தவணை தொகை வழங்குவதற்கான நிகழ்ச்சி கரியமாணிக்கம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் ராஜவேலு கலந்து கொண்டு, 44 பயனாளிகளுக்கு ரூ. 46 லட்சம் மதிப்பிலான வீடுகட்டும் பணி ஆணையினை வழங்கினார். நிகழ்ச்சியில் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி