மேலும் செய்திகள்
தி.மு.க., - பா.ஜ., இடையே வேறுபாடில்லை: சீமான்
22-Feb-2025
புதுச்சேரி : சட்டசபை பூஜ்ய நேரத்தில் சம்பத் எம்.எல்.ஏ., பேசியதாவது:புதுச்சேரியில் மீண்டும் வீடு அபகரிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. லாஸ்பேட்டையில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்தவர்கள் அந்த வீட்டினை காலி செய்ய 75 லட்சம் ரூபாய் கேட்கின்றனர். இத்தனைக்கும் தமிழ்நாட்டின் சப் கலெக்டரின் வீடு இது. இதுபோன்ற வீடு அபகரிப்பு சம்பவங்கள் புதுச்சேரி நகரம் முழுவதுமே நடக்கின்றது. இதன் பின்னணியில் ஒரு கும்பல் உள்ளது. வீடு அபகரிப்பு சம்பந்தமாக காவல் துறையில் புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. இதுபோன்ற வீடு அபகரிப்பினை தடுக்க ஒரு சட்ட வரையறை கொண்டு வர வேண்டும். இல்லையெனில் தமிழகத்தில் உள்ளதை போன்று இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் அந்த அதிகாரத்தை கொடுக்க வேண்டும்.
22-Feb-2025