உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின்துறை கூட்டு நடவடிக்கை குழு உண்ணாவிரத போராட்டம்

மின்துறை கூட்டு நடவடிக்கை குழு உண்ணாவிரத போராட்டம்

புதுச்சேரி: கோரிக்கைகளை வலியுறுத்தி மின்துறை பொறியாளர் மற்றும் தொழிலாளர் நலச்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.புதுச்சேரி மின்துறையில் காலியாக உள்ள அனைத்து பதவிகளையும் பதவி உயர்வு, நேரடி நியமனம் மூலம் நிரப்ப வேண்டும். பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் அனைத்து பதவிகளையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மின்துறையில் உயிரிழந்த ஊழியர்கள் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி மின்துறை பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில், மின்துறை தலைமை அலுவலகம் எதிரில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.கூட்டு நடவடிக்கை குழு தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் தணிகாச்சலம் முன்னிலை வகித்தார். செயல் தலைவர் செந்தில்குமார், உத்திராடம், துணை தலைவர் தணிகைவேல், ரவிச்சந்திரன், முருகன் உட்பட பலர் பங்கேற்றனர். பொருளாளர் இளங்கோவன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை