மேலும் செய்திகள்
ஒருவர் மீது வழக்கு
14-May-2025
வாகனம் மோதி மூதாட்டி பலி
21-May-2025
புதுச்சேரி : அரியாங்குப்பம், சீனிவாச நகரை சேர்ந்தவர் தணிகாசலம், 70. இவர் நேற்று மாலை திண்டிவனத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு தனது மனைவியுடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.கோரிமேட்டை கடந்தபோது மழை பெய்ததால், அவர்கள் மீண்டும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். ஜிப்மரை கடந்து சென்றபோது, அவர்களுக்கு முன் சென்ற லாரியை பக்கவாட்டில் முந்தி செல்ல முயன்றார். அப்போது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று திடீரென புறப்பட்டது.இதனை சற்றும் எதிர்பாராத தணிகாசலம் ஸ்கூட்டரில் இருந்து நிலை தடுமாறி விழுந்தனர். அவருடன் மனைவியும் விழுந்தார். தணிகாசலம் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி, மனைவி கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
14-May-2025
21-May-2025