மேலும் செய்திகள்
கிரைம் செய்திகள்...விழுப்புரம்
30-Apr-2025
புதுச்சேரி: மனைவியிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றவரை காணவில்லை. திருப்பூரை சேர்ந்தவர் ராஜா, 46. இவர், கடந்த 6 ஆண்டுகளாக, புதுச்சேரியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு ஆன்லைன் விளையாட்டில் அதிக ஆர்வம். இந்நிலையில், தனது மனைவியிடம் செலவுக்கு பணம் கேட்டார். அவர் பணம் தர மறுத்ததால், கோபித்து கொண்டு, நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியில் சென்றார். இரவு வரை வீடு திரும்பாததால், பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, ராஜாவை தேடி வருகின்றனர்.
30-Apr-2025