மேலும் செய்திகள்
மின்சாரம் தாக்கி ஊழியர் படுகாயம்
08-Jun-2026
அரியாங்குப்பம்: விழுப்புரம் அடுத்த வீடுர் அணை, ஆத்திகுப்பம் காலனியை சேர்ந்தவர் கெங்கமுத்து, 50. இவர் தவளக்குப்பம் முத்துமுதலியார் நகரில் வாடகை வீட்டில் மனைவியுடன் வசித்து வருகிறார். இவர், வெளி மாநிலம் மற்றும் வெளியூருக்கு பொக்லைன் ஓட்டுவதற்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில், வீட்டில் இருந்து கடந்த மே 10ம் தேதி ராமேஸ்வரம் தொண்டி பகுதிக்கு பொக்லைன் ஓட்டுவதற்கு சென்றார். பல நாட்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை. அவரது மொபைலும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. உறவினர்களின் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. இதுகுறித்து, அவரது மனைவி கலா கொடுத்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
08-Jun-2026