உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  விஜயின் தீவிர ரசிகன் நான் மாஜி அமைச்சர் பளீச்

 விஜயின் தீவிர ரசிகன் நான் மாஜி அமைச்சர் பளீச்

புதுச்சேரி: த.வெ.க., தலைவர் விஜயின் தீவிர ரசிகன் என, முன்னாள் அமைச்சர் சாய்சரவணன்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து கூறியதாவது; அரசியலில் எனது தலைவர் பிரதமர் மோடி. சினிமாவில், விஜயின் தீவிர ரசிகன் நான். தமிழகத்தில் நல்ல தலைவர் வரமாட்டாரா என பல கோடி மக்கள் காத்திருந்த நிலையில், கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்த நடிகர் விஜய், மக்களுக்காக சேவை செய்ய, கட்சி தலைவராக வந்துள்ளார். பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தை முன்னோடி மாநிலமாக மாற்றினார். இந்தியாவில் ஆளுமை தலைவராக பிரதமர் இருக்கிறார். அதே போன்று, தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, 18 ஆண்டு காலம், திராவிட கட்சியை நடத்தி, பல சாதனைகள் செய்துள்ளார். அதேபோல் விஜய் சிறந்த தலைவராக வரவேண்டும். தமிழக முதல்வராக இருந்த காமராஜரை போல் விஜய், மக்களை பற்றி படிக்க வேண்டும். ஒவ்வொரு கிராமத்திற்கு சென்று மக்களை சந்தித்து, மாநில பிரச்னைகளை மக்களிடம் எடுத்து கூறவேண்டும். மற்றவர்கள் எழுதி கொடுத்ததை வைத்து பேசாமல், தீர விசாரித்து பேச வேண்டும். தலைவர் என்பவர் தங்களை சுற்றி திறமைசாலிகளாக வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை